Case against Madhampatti Rangaraj – Joy Crizildaa petition for CB CID investigation | மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு

Case against Madhampatti Rangaraj – Joy Crizildaa petition for CB CID investigation | மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு


சென்னை,

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கும் இடையேயான பிரச்சினை கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்துத் திருமணம் செய்ததாகவும், என்னுடைய குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கூறியதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ சோதனைக்கு வர வேண்டும் என ஜாய் கிரிசில்டா பேசியுள்ளார். ரங்கராஜ் மிரட்டலின் பெயரில் பேசுறாரா? என்ற கேள்விக்கு ஜாய் கிரிசில்டா வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிரிசில்டா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். ஜாய் கிறிசில்டாவின் மனுவுக்கு வரும் 12ம் தேதிக்குள் ஜாய் கிரிசில்டாவின் புதிய மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *