Boyfriends who don’t give “thrill”… – Actress Amalapal | “திரில்” கொடுக்காத ஆண் நண்பர்கள்…

Boyfriends who don’t give “thrill”… – Actress Amalapal | “திரில்” கொடுக்காத ஆண் நண்பர்கள்…


திருவனந்தபுரம்,

தமிழ் சினிமாவில் ‘வீரசேகரன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது ‘சிந்து சமவெளி’ திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த ‘மைனா’ திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், ‘தலைவா’ மற்றும் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இளய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.

திருமணம், குழந்தைகள் என்று மாறியதற்கு பிறகு படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையில் அமலாபால் தனது மனம் திறந்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

“எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தாலும், அவர்களால் எந்த திரிலும் எனக்கு ஏற்பட்டதே கிடையாது. இதனால் கடவுளிடம், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட ஆண் நண்பர்களை கொடுக்கிறாய். நான் இனிமையான பெண் அல்லவா, என்னை ஆச்சரியப்படுத்தும் ஆண் நண்பர்தானே எனக்கு தேவை. அது ஏன் உனக்கு புரியவில்லை’ என புகார் செய்தேன். அதன் பின்னர்தான் ஜெகத் தேசாய் என் வாழ்வில் வந்தார். எனக்கு திரில் தந்தார். ஆச்சரியங்களை அள்ளி கொடுத்தார்” என்று அமலாபால் கூறினார்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *