‘Bomb’ film was an interesting experience – Arjun Das | சுவாரஸ்ய அனுபவத்தை கொடுத்த படம் ‘பாம்’

சென்னை,
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இவர் தற்போது ‘பாம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இதனை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இப்படத்தில், அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். பாம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.இப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் தாஸ், “அநீதி என்ற படத்தில் நானும், காளி வெங்கட்டும் இணைந்து நடித்திருந்தோம். ஆனால், இரண்டு பேருக்குமான காட்சிகள் இல்லை. அந்த குறையை இந்த படம் நிவர்த்தி செய்திருக்கிறது. நான் நடித்த படங்களிலேயே சுவாரஸ்யம் மிக்க அனுபவத்தை கொடுத்த படம் இதுதான்” என்று பேசியிருக்கிறார்.
நடிகர் காளி வெங்கட், “பல படத்திற்கு ரிகர்சல் செய்துவிட்டு போவோம். ஆனால் இந்த படத்திற்கு இப்படி ரிகர்சல் செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உயிர் இல்லாத பிணம் போல நடித்துள்ளதால், இது ஒரு புது அனுபவமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






