‘Bahubali’, ‘RRR’ chosen for Telangana govt’s ‘Gaddar Film Awards’

‘Bahubali’, ‘RRR’ chosen for Telangana govt’s ‘Gaddar Film Awards’



ஐதராபாத்,

விருது தேர்வு நடுவர் குழுவிற்கு தலைமை தாங்கிய மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான முரளி மோகன் விருது பெற்ற வெற்றியாளர்களின் பெயர்களை அறிவித்தார்.2014ம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் மதிப்புமிக்க நந்தி திரைப்பட விருதுகளை வழங்குவதை நிறுத்திவிட்டதாக முரளி மோகன் கூறினார். நாட்டுப்புறப் பாடகரும், நடனக் கலைஞருமான ‘கத்தார்’ அவர்களின் பெயரைச் சூட்டி திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான முடிவிற்கு முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை முரளி மோகன் பாராட்டினார்.

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘பாகுபலி-2’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ ஆகியவை தெலுங்கானா அரசின் 2014 முதல் 2023 வரையிலான ஆண்டுகளுக்கான கத்தார் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுகளில் இடம்பெற்றன.

பைடி ஜெய்ராஜ் திரைப்பட விருதுக்கு இயக்குனர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முரளி மோகன் தெரிவித்தார். தெலுங்கானாவைச் சேர்ந்த பைடி ஜெய்ராஜ், பாலிவுட்டில் மூத்த நடிகராகவும் இயக்குநராகவும் இருந்தவர், அவர் மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார்.

என்.டி.ஆர் தேசிய திரைப்பட விருதுக்கு நடிகர் பாலகிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாலகிருஷ்ணா பழம்பெரும் என்.டி.ராமராவின் மகன் ஆவார்.

‘புஷ்பா’ பட இயக்குனர் சுகுமார் பி என் ரெட்டி திரைப்பட விருதை பெற்றார்.

நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி திரைப்பட விருதுக்குமூத்த திரைப்பட தயாரிப்பாளர் அட்லூரி பூர்ணச்சந்திர ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘காந்த ராவ்’ திரைப்பட விருதை இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா வென்றார். ‘கல்கி 2898 ஏடி’ சிறந்த திரைப்பட விருதை வென்றுள்ளது.

பிரபல தெலுங்கு எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ‘யண்டமூரி வீரேந்திரநாத்’ ரகுபதி வெங்கையா திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2014 ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘ரன் ராஜா ரன்’, ‘பதசாலா’ மற்றும் ‘அல்லுடு ஸ்ரீனு’

2015 ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘ருத்ரமா தேவி’, ‘கஞ்சே’ மற்றும் ‘ஸ்ரீமந்துடு’

2016ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் – ‘சதமனம் பவதி’, ‘பெள்ளி சுப்புலு’ மற்றும் ‘ஜனதா கேரேஜ்’

2017ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் – ‘பாகுபலி’, ‘கன்க்ளூஷன் பிடா’ மற்றும் ‘காஜி’

2018 ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘மகாநதி’, ‘ரங்க ஸ்தலம்’ மற்றும் ‘சி/ஓ காஞ்சேரபாலம்’

2019ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘மஹர்ஷி”, ‘ஜெர்சி’ மற்றும் ‘மல்லேஷம்’

2020ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘ஆலா வைகுண்டபுரமுலோ’, ‘கலர் போட்டோ’ மற்றும் ‘மிடில் கிளாஸ் மெலடிஸ்’

2021ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘ஆர்ஆர்ஆர்’,’அகண்டா’ மற்றும் ‘உப்பெனா’

2022ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘சீதாராமம்’, ‘கார்த்திகேயா-2’ மற்றும் ‘மேஜர்’

2023ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் – ‘பாலகம்’, ‘ஹனு மன்’ மற்றும் ‘பகவந்த கேசரி’

‘புஷ்பா 2’ படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதை அறிவித்ததற்காக அல்லு அர்ஜுன் அரசுக்கு நன்றி தெரிவித்தார். ‘புஷ்பா 2’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்காக தெலுங்கானா அரசுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்துப் புகழும் எனது இயக்குனர் சுகுமார் , மற்றும் எனது தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த புஷ்பா குழுவினருக்கே சேரும். இந்த விருதை எனது அனைத்து ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன், உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.” என கூறியுள்ளார்.

தெலுங்கானா உருவான பிறகு வழங்கப்படும் முதல் அதிகாரபூர்வ மாநில அளவிலான திரைப்பட விருது இதுவாகும். தெலுங்கு சினிமாவை மேம்படுத்துவதற்காக நந்தி விருதுகள் மீண்டும் நடத்தப்படும் என்றும், 202ல் காலமான புரட்சிகர கவிஞரும் பாடலாசிரியருமான கும்மாடி விட்டல் ராவ் எனப்படும் கத்தார் நினைவாக நந்தி விருதுகள் மீண்டும் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *