“Avatar: Fire and Ash” New trailer Out

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் தயாரானது. இந்தப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’, சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இது ஒன்றாகும்.
அவதார் படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது புதிய நாவி பழங்குடியினர் மற்றும் பசுமையான, அன்னிய உலகத்திலிருந்து பிரமிப்பூட்டும் காட்சிகளைக் காட்டுகிறது. சிறப்பான பாண்டாரோ உலகிற்கு ரசிகர்களை வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கேமரூன் மூன்றாம் பாகத்தில் பண்டோரா உலகில் இரண்டு புதிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தார். அவதார் 3ல் நெருப்பு ஒரு குறியீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், அந்தக் கருத்தைச் சுற்றி குறிப்பாக ஒரு கலாச்சாரம் பின்னப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் டிசம்பர்19ம் தேதி வெளியாகியுள்ளது.