Allu Arjun shared Rohit Sharma video on Instagram story

‘புஷ்பா 2’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ரோகித் சர்மாவுடன் அவரது சகோதரர் அல்லு சிரிஸ் நடித்துள்ள விளம்பர வீடியோவை அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த இன்சூரன்ஸ் விளம்பர வீடியோவில் ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகாவுடன் அல்லு சிரிஸ் இணைந்து நடித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. வாவ்! சிரிஸ்… உன்னை நினைத்து ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. இதுக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள், ரோகித்திற்கு என் சிறப்பு மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2025ல் பல்துறை நடிகருக்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.






