Ajith’s wife’s post on Michael Jackson’s birthday goes viral

Ajith’s wife’s post on Michael Jackson’s birthday goes viral


உலக அளவில் பாப் பாடலில் சூப்பர் ஸ்டார் என்றால் அது மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தான். 16 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2009ம் ஆண்டே மறைந்துவிட்டாலும் அவர் என்றைக்கும் கொண்டாடப்படும் ஐகான்.

மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவில் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தார். மைக்கேல் அடிப்படையில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்றாலும் புகழும் செல்வமும் கூட கூட அவர் தனது நிறத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ள பல சிகிச்சைகளை செய்து கொண்டார். இது விமர்சனத்திற்கு ஆளானாலும் அது அவரது தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

மைக்கேல் ஜாக்சன் இசை உலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அளப்பரியது. அது உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் என்பது உலக பிரசித்தி பெற்றது. மைக்கேல் ஜாக்சன் 13 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதில் ஒரே ஆண்டில் அதிக கிராமி விருதுகள் வென்றதும் அடங்கும்.

மைக்கேல் தனது 50வது வயதில் மரணமடைந்தார். ஆனால் அவரது இசைப் பயணம் அவரை இந்த உலகம் உள்ளவரை நினைவில் வைத்திருக்கும் படியாக அமைந்துள்ளது. அவரது பிறந்த நாள் அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகையும் நடிகர் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி மைக்கேலின் மெழுகு சிலை உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவரது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *