Ajith’s “Good Bad Ugly” to release in 1000 screens

Ajith’s “Good Bad Ugly” to release in 1000 screens


சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தியிலும் இப்படத்தை அதிக திரைகளில் வெளியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் நாளிலே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *