Ahsaas Channa wishes to make her Bollywood debut in an Aamir Khan|’அவருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக விரும்புகிறேன்’

Ahsaas Channa wishes to make her Bollywood debut in an Aamir Khan|’அவருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக விரும்புகிறேன்’


சென்னை,

2004-ம் ஆண்டு தனது 5 வயதில் இந்தியில் வெளியான ‘வாஸ்து சாஸ்த்ரா’ படத்தில் சுஷ்மிதா சென்னின் ‘மகனாக’ நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஹ்சாஸ் சன்னா. அதன்பின்னர் 2006-ம் ஆண்டு வெளியான கபி அல்விதா நா கெஹ்னாவில் ஷாருக்கானின் ‘மகனாக’ நடித்திருந்தார்.

இவர் பெண்ணாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஆண் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றி பிரபலமாகி இருக்கிறார். அதன்பின்னர், வெப் தொடர்கள் மற்றும் குறும்படங்களில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த அஹ்சாஸ் சன்னா, தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாக விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘நான் அமீர் கானுக்கு ஜோடியாக நடிக்க விரும்புகிறேன். ஒரு நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமீர்கானை இம்தியாஸ் அலி படத்தில் கற்பனை செய்து பாருங்கள்’ என்றார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *