Actress Shobana received the Padma Bhushan award

Actress Shobana received the Padma Bhushan award


டெல்லி,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த சூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முா்மு நடிகை ஷோபனாவுக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி பூத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *