Actress Dushara Vijayan to make her Malayalam debut

‘மார்கோ’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது ‘காட்டாளன்’ திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். சுனில், கபீர் துஹான் சிங், ராஜ் திரந்தாசு ஆகியோர் இணைந்துள்ளனர்.
பான்-இந்திய வெற்றிப் படமான ‘காந்தாரா’ படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முஹமது தயாரிக்கும் இரண்டாவது படமான ‘காட்டாளன்’ மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தாய்லாந்தி துவங்கின. முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘காட்டாளன்’ படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. நடிகை துஷாரா விஜயன் முதல்முறையாக மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் கவனம் ஈர்த்த துஷாரா ரஜினியின் வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன், தனுஷின் ராயனிலும் நடித்துள்ளார்.






