Actor Vishal Swami’s darshan at Jagannath Devi Temple

மங்களூர்,
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘காந்தாரா’. இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் ‘பஞ்சுருளி’ என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘காந்தாரா சாப்டர் 1’ என்று பெயரிட்டு படப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.
“காந்தாரா” படத்தின் மூலமாக கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது
இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்த நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா படம் சுமார் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.