actor vasanth ravi’s indra movie introduction video out| “இந்திரா” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

actor vasanth ravi’s indra movie introduction video out| “இந்திரா” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு


தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி தற்போது இந்திரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண் மாஸ்டர் , சுனில், மெஹ்ரின் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், ‘இந்திரா’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மருத்துவம், பிரேத பரிசோதனைப் பின்னணியில் காட்சிகள் அமைந்ததுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *