Actor Rajesh’s body sacred | நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்

Actor Rajesh’s body sacred | நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்


சென்னை,

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். சமீபகாலமாக உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 75.

மரணம் அடைந்த நடிகர் ராஜேசின் உடல், ராமாபுரம் கோத்தாரிநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அன்றைய தினமே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜேஷ் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

வெளிநாட்டில் இருந்து நடிகர் ராஜேஷின் மகள் நேற்று நள்ளிரவு வந்துவிட்டதால் இன்று ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செயப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் இன்று ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மதியம் 1 மணியளவில் அமரர் ஊர்தியில் ராஜேஷின் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. பின்பு அசோக் நகரில் உள்ள வெற்றி சிலுவை சர்ச்சில் ராஜேஷின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு இறுதி திருப்பலி செய்யப்பட்டது. தொடர்ந்து கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைக்கு அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்பு அங்கு அவர் ஏற்கனவே கட்டிவைக்கப்பட்ட கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் போதே தனது உடல் அடக்கம் இப்படிதான் செயல்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ராஜேஷின் அம்மா, அப்பா மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையிலே ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *