A work that makes you laugh, think and appreciate “ Mareesan” – Kamal Review | சிரிக்கவும்,சிந்திக்கவும், பாராட்டவும் வைத்த படைப்பு “மாரீசன்”

A work that makes you laugh, think and appreciate “ Mareesan” – Kamal Review | சிரிக்கவும்,சிந்திக்கவும், பாராட்டவும் வைத்த படைப்பு “மாரீசன்”


சென்னை,

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து ‘மாரீசன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘மாரீசன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் “மாரீசன்” படத்தைப் பார்த்தேன் – இது நகைச்சுவைக்கும் மனித மனதிற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம், என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது இந்த படைப்பு. இந்த மகிழ்ச்சிகரமான படைப்பிற்காக அவர்களை வாழ்த்த குழுவினருடன் ஒரு அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். பார்வையாளராகவும் படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு புதுமையான, உற்சாகமான சினிமா மாரீசன்” என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *