A lot of supernatural things happened while acting in the film “Sabdham” – Aadhi | “சப்தம்” படத்தில் நடித்தபோது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது

சென்னை,
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து ‘சப்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன். இந்த படத்தில் ஆதி, ‘ரூபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சப்தம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் ” சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரித்து பார்ப்பதில்லை. கதையைதான் பார்ப்பேன். எல்லா கதாநாயகர்களுடனும் வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது. எல்லா வில்லனுடம் கதாநாயகனாக நடிக்க ஆசை இருக்கிறது. சப்தம் படத்தில் நடித்தபோது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நான், லைலா, அறிவழகன் பேசிக் கொண்டிருந்தபோது கூட லைட் ஆடிக்கொண்டே இருந்தது. இப்படி பல விஷயங்கள் அடிக்கடி நடந்ததால் ஈசியாக நினைக்க தோன்றிவிட்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்பும்போது பேய் இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது. எல்லா படத்தின் கதை பற்றியும் மனைவியுடன் கலந்து பேசி ஆலோசனை செய்வேன். ஆனால் முடிவு நான் எடுப்பதுதான். இந்த வருடம் தமிழ் சினிமாவில் என்னுடைய நடிப்பில் பல படங்கள் வர இருக்கிறது” என்று கூறியுள்ளார்.






