82 வது பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளையராஜா

82 வது பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளையராஜா


சென்னை,

இசைஞானி இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். வாழ்த்து செல்ல நேரில் வந்து இருந்த ரசிகர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்த ஆண்டு மகள் பவதாரணி புற்றுநோயால் இறந்ததால் அப்போது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை என இளையராஜா அறிவித்திருந்தார்.

இளையராஜா குறித்த சில தகவல்கள்:

இளையராஜாவுக்கு இசைஞானி என்கிற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. இசையின் ராஜா, இசை கடவுள் என்பவை ரசிகர்கள் கொடுத்த பட்டங்களாகும். தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரம் என்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயி தம்பதியரின் மகனாகப் பிறந்தார் இசைஞானி இளையராஜா. திரையுலகில் 1976 அன்று இவரது இசைப்பயணம் தொடங்கியது.

ஆசியாவிலேயே முதல் முறையாக “சிம்ஃபொனி” இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. இசை உலகில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கும் இளையராஜாவின் இசையை கேட்காமல் பலருக்கும் ஒருநாள் நிறைவு பெறாது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், ராமராஜன் ஆகியோரின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இளையராஜாவின் பங்கு முக்கியமானது என்று சொன்னால் அது மிகையல்ல. வடக்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில், தனி ஒரு கலைஞனாக இருந்து தமிழ் சினிமாவில் இசையை செழிக்க செய்ததிலும், இசையை மக்களுக்கு நெருக்கம் ஆக்கியதிலும் முக்கியமானவர் இளையராஜா.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *