71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் விருது பெற்ற ஷாருக்கான்

புது டெல்லி,
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் வென்றனர்.
இந்நிலையில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் பெற்றார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை பெற்றுகொடுத்துள்ளது.