‘7ஜி ரெயின்போ காலனி 2’ படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த செல்வராகவன்

சென்னை,
இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்பேசும் வார்த்தைகள்’ , ‘கனா காணும் காலங்கள்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.
19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியானது. 19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.