5 நிமிட பாடலுக்காக பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிப்பில் ”ஏஏ22xஏ6” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு புதிய படம் உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுனுடன் 6 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். தீபிகா படுகோனே, ஜான்விகபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தில் சிறப்பு பாடல் ஒன்று இடம் பெற இருக்கிறது. பாடலில் நடனமாடுவதற்கு பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. 5 நிமிடம் இடம் பெறும் படத்தின் பாடல் காட்சிக்கு பூஜா ஹெக்டேவுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூலி படத்தில் இடம் பெற்ற ”மோனிகா” பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.