47 வயதிலும் இளமையாக இருக்க இதுதான் காரணம்: மஞ்சு வாரியர் பகிர்ந்த ரகசியம்

47 வயதிலும் இளமையாக இருக்க இதுதான் காரணம்: மஞ்சு வாரியர் பகிர்ந்த ரகசியம்


மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் ‘அசுரன்’, ‘துணிவு’, ‘விடுதலை-2′, ‘வேட்டையன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாள சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர், 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார்.

இந்தநிலையில் ‘இப்போதும் அதே ஸ்டைல் மற்றும் இளமையுடன் நீங்கள் வலம் வருகிறீர்களே… அதன் ரகசியம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘உடற்பயிற்சி மற்றும் நடனம் தான் காரணம். சரியான உணவு முறைகளும் என்னை பாதுகாப்பதாக உணருகிறேன்” என்று சிரித்தபடி கூறியுள்ளார். மஞ்சு வாரியர் தினமும் தவறாமல் ‘ஜிம்’முக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *