4 நாட்களில் 'குடும்பஸ்தன்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

4 நாட்களில் 'குடும்பஸ்தன்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?


சென்னை,

தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தநிலையில், குடும்பஸ்தன் திரைப்படம் 4 நாட்களில் ரூ.8.7 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.�

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *