’4 தனித்துவமான இயக்குனர்களை இயக்கியது மறக்க முடியாதது’ – அஸ்வத் மாரிமுத்து |’Directing 4 unique directors is unforgettable’

சென்னை,
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வெளியான திரைப்படம் ‘டிராகன்’. இதில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.37 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘டிராகன்’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார். அதில், .
“வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த 4 தனித்துவமான இயக்குனர்களை இயக்கியது மறக்க முடியாதது. நினைவில் கொள்ளவேண்டிய தருணம்” என்று தெரிவித்திருக்கிறார்.