4 கோடி கிலோ தங்கம்… 18 கோடி கிலோ நகைகள்… எலோன் மஸ்கிற்கு முன்னர் உலகின் முதல் கோடீஸ்வரர்

4 கோடி கிலோ தங்கம்… 18 கோடி கிலோ நகைகள்… எலோன் மஸ்கிற்கு முன்னர் உலகின் முதல் கோடீஸ்வரர்


இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களை வரிசைப்படுத்தினால், அதில் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி உட்பட சிலரது பெயர்கள் தொடர்ச்சியாக குறிப்பிடப்படும்.

கணக்கிட முடியாத சொத்து

ஆனால் சுதந்திர இந்தியாவில் முதல் பெரும் கோடீஸ்வரராக அறியப்பட்டவர், அதுவும் ஒரு குறுநில மன்னர் என்றால் நம்புவது கடினம். அவரது கணக்கிட முடியாத சொத்துக்களும், தனித்துவமான வாழ்க்கை முறையும் தற்போதும் வரலாற்றாசிரியர்களை ஆர்வமூட்ட வைத்துள்ளது.

4 கோடி கிலோ தங்கம்... 18 கோடி கிலோ நகைகள்... எலோன் மஸ்கிற்கு முன்னர் உலகின் முதல் கோடீஸ்வரர் | World Richest Man Before Elon Musk

அந்த பெருமைகள் அனைத்தும்
ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி கானுக்கு மட்டுமே பொருந்தும். அவரது அசாதாரண சொத்துக்கள் அவரது சகாப்தத்தில் அவரை உலக அளவில் ஆடம்பரத்தின் அடையாளமாக மாற்றியது.

மீர் உஸ்மான் அலிகான் ஹைதராபாத்தை 1911 முதல் 1948ல் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைக்கும் வரை ஆட்சி செய்தார். அவர் குவித்திருந்த சொத்துக்களால், 1937ல் பிப்ரவரி மாதம் உலகின் பெரும் கோடீஸ்வரர் என டைம் பத்திரிகையால் புகழாரம் சூட்டப்பட்டார்.

அவரிடம் சுமார் 4 கோடி கிலோ அளவுக்கு தங்கம் குவிக்கப்பட்டிருந்தது. தங்க, வைர நகைகள் மட்டும் 18 கோடி கிலோ இருந்துள்ளது. அத்துடன் கோல்கொண்டா வைரச் சுரங்கங்களின் உரிமையும் அவரிடம் இருந்தது.

இன்றைய பண மதிப்பின்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது இந்திய பண மதிப்பில் ரூ 17.47 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.

எலிசபெத்தின் திருமணத்திற்காக

ஆனால் கடைசி வரையில் நிஜாம் கஞ்சத்தனத்திற்கு பெயர் பெற்றவர் என்றே அறியப்பட்டார். ரூ 100 கோடி மதிப்பிலான வைரத்தை மேஜை மீது வைத்திருப்பவர், மிக எளிமையான உடைகளை மட்டுமே உடுத்தியுள்ளார்.

4 கோடி கிலோ தங்கம்... 18 கோடி கிலோ நகைகள்... எலோன் மஸ்கிற்கு முன்னர் உலகின் முதல் கோடீஸ்வரர் | World Richest Man Before Elon Musk

மட்டுமின்றி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அவரது படுக்கையறையை சுத்தம் செய்யவே அனுமதித்திருக்கிறார். விருந்தினர்களை கவனிப்பதிலும் கஞ்சத்தனமாகவே இருந்துள்ளார்.

இருப்பினும் அவர் 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தார். பிரித்தானிய ராணியார் எலிசபெத்தின் திருமணத்திற்காக 300 வைரங்கள் பதித்த நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இவரிடம் அரிதான கோஹினூர், ஹோப் டயமண்ட், தர்யா-இ-நூர், நூர்-உல்-ஐன், பிரின்சி, ரீஜண்ட் மற்றும் விட்டல்ஸ்பாக் உள்ளிட்ட வைரங்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *