37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த கரீனா கபூர் பெற்றோர்

இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர்கள் கரீனா கபூர், கரீஷ்மா கபூர். இவர்களது பெற்றோரான ரந்தீர் கபூர்-பபிதா ஆகியோர் தங்களுக்குள் 1988-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கரீனா கபூரும், கரீஷ்மா கபூரும் தாயாருடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இருவரும் விவாகரத்து செய்யவில்லை. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு ரந்தீர் கபூரும், பபிதாவும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து கரீனா கபூர் கூறுகையில், “எல்லோருடைய பெற்றோரும் உலகின் சிறந்த பெற்றோர்கள். என் பெற்றோரும் உலகில் சிறந்த பெற்றோர்கள். தற்போது இருவரும் முதுமையை கைகோர்த்து கழிக்க முடிவு செய்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.
ரந்தீர் கபூர், பபிதா ஆகியோர் கல்ஆஜ்அஷர்கல் படத்தில் ஒன்றாக நடித்த போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு சினிமா நடிப்பில் இருந்து விலகினர்.