30 நாடுகளில் வெளியாகும் “காந்தாரா 2”

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி அதன் 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறார், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து, தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
‘காந்தாரா 2’ படத்தில், நடிகர்களின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து, போஸ்டரை வெளியிட்டது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் மலையாள வெளியீட்டு உரிமையினை பிரித்விராஜ் கைப்பற்றி இருக்கிறார்.இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘காந்தாரா 2’ படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
காந்தாரா மற்றும் கேஜிஎப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமே ‘காந்தாரா 2’யும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.