30 ஆண்டுகளுக்குப் பிறகு "இருவர்" – பிரகாஷ் ராஜ் பகிர்ந்த புகைப்படம் !

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பல மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்துவருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர். தமிழகத்திலிருந்த மிக முக்கியமான இரண்டு ஆளுமைகளின் நட்பு மற்றும் வாழ்க்கையை மறைமுகமாக பேசிய படமென்பதால் இன்றுவரை மணிரத்னம் இயக்கிய படங்களில் இருவருக்கு சிறப்பான இடம் உண்டு. அதன்பின், மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணி, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில், கேரளத்தில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவில் பிரகாஷ் மற்றும் மணிரத்னம் இருவரும் கலந்துகொண்டு உரையாடலில் பங்கேற்றனர். இதைக் குறிப்பிட்ட பிரகாஷ் ராஷ், ‘3 தசாப்தங்களுக்குப் பிறகு இருவர். பேரின்பம்’ எனப் பதிவிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.