3 நாட்களில் “கே-ராம்ப்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘கா’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தில்ருபா திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது இவர் ‘கே-ராம்ப்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹாச்யா மூவீஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை ஜெயின்ஸ் நானி இயக்கியுள்ளார். யுக்தி தரேஜா கதாநாயகியாக நடித்த இப்படம் கடந்த 18-ம் தேதி வெளியானது.
கிரண் அப்பாவரம் நடித்த ‘கே-ராம்ப்’ படம் 3 நாட்களில் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.