26 வருடங்களுக்கு பிறகு வைரலான வீடியோ: யார் இந்த பாடகர் சத்யன் மகாலிங்கம்?

‘ரோஜா ரோஜா’ பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் பாடகர் சத்யன் மகாலிங்கம். இவர் 26 வருடங்களுக்கு முன் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலை ஒரு நிகழ்ச்சியில் சத்யன் மகாலிங்கம் பாடினார். அப்போது அவர் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
20 வயதில் அந்த மெலடி பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார். முக்கியமாக, சத்யன் பாடிய கலக்கப்போவது யாரு (வசூல் ராஜா எம்பிபிஎஸ் ), ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு), சில் சில் மழையே (அறிந்தும் அறியாமலும்), அட பாஸு பாஸு (பாஸ் என்கிற பாஸ்கரன்), குட்டி புலி கூட்டம் (துப்பாக்கி), கனவிலே கனவிலே (நேபாளி), தீயே தீயே (மாற்றான்), குப்பத்து ராஜாக்கள் (பானா காத்தாடி) ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தும் சத்யனுக்கு பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை. திறமையான பாடகராக இருந்தும் தொடச்சியான வாய்ப்புகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இந்த நிலையில், சத்யனுக்கு இன்ப அதிர்ச்சியாக இவர் பாடிய ’ரோஜா, ரோஜா’ பாடல் 26 ஆண்டுகளுக்குப் பின் வைரலாகி மீண்டும் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதற்காக, சத்யன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.