25 மில்லியன் பார்வைகளை கடந்த "மிராய்" டீசர்

பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் கடந்தாண்டு வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். ஆகஸ்ட் 1ம் தேதி ‘மிராய்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழுவினர், உலகளவில் எட்டு மொழிகளில் படம் 2டி மற்றும் 3டி முறையில் திரையிடப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
தேஜா சஜ்ஜா நடித்த ‘மிராய்’ படத்தின் டீசர் கடந்த 28ம் தேதி வெளியானது.
இந்த நிலையில் தேஜா சஜ்ஜா நடித்த ‘மிராய்’ படத்தின் டீசர் இதுவரை 25 மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது. இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.