2021,2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை,
இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு மற்றும் நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்டோருக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.