20 மில்லியன் பார்வைகளை கடந்த “பவர் ஹவுஸ்” பாடல்

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, ‘கூலி’ படத்தின் 3வது பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த லிரிக் வீடியோ பாடல் யூடியூபில் இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக படக்குழு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.