20வது ஆண்டு திருமண நாளையொட்டி நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட காதல் பதிவு

20வது ஆண்டு திருமண நாளையொட்டி நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட காதல் பதிவு


மகேஷ் பாபு – நம்ரதா ஆகிய இருவருக்குமிடையே கடந்த 2000-ம் ஆண்டு ‘வம்சி’ படப்பின்போது காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், தனது 20-ஆவது திருமண நாளையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நீயும் நானும் 20 அழகான ஆண்டுகளாக… என்றென்றும் உன்னுடன் நம்ரதா!” என்று தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.�

மகேஷ் பாபு – நம்ரதா தம்பதிகளுக்கு கவுதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர். இத்தம்பதியை சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் திருமண நாள் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

மும்பையில் பிறந்து வளர்ந்த நம்ரதா இந்தி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், மலையாளம் மொழிகளில் அறிமுகமான நம்ரதாவிற்கு வம்சி என்ற படம் தெலுங்கு சினிமாவில் அறிமுகத்தை கொடுத்தது. வம்சி படத்திற்கு பிறகு அஞ்சி மற்று மேஜர் ஆகிய தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார். மராத்தி மொழியிலும் நம்ரதா ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *