2 படங்களில் ஷாருக்கானுக்கு தாய்…ஆனால், கல்லூரியில் ஜூனியர் – யார் அந்த நடிகை தெரியுமா?

சென்னை,
பல பாலிவுட் நடிகைகள் தங்கள் சினிமா கெரியரை பல விதமான வேடங்களில் தொடங்கி இருந்தாலும், இறுதியில் தாய் கதாபாத்திரங்களில் நடித்து இதயங்களை வென்றிருக்கிறார்கள்.
ரீமா லாகூ, பரிதா ஜலால், ஹிமானி ஷிவ்புரி மற்றும் நிருபா ராய் போன்ற நடிகைகள் தங்கள் வயதை நெருங்கிய அல்லது அதை விட மூத்த நடிகர்களின் தாயாக நடித்திருக்கிறார்கள்.
ஆனால் தனது கல்லூரி சீனியரின் தாயாக ஒரு முறை அல்ல, இரண்டு முறை நடித்த நடிகையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. ஆச்சரியப்படும் விதமாக, அந்த நடிகை, நடிகரை விட எட்டு வயது இளையவர்.
அந்த நடிகை வேறு யாருமில்லை, பதாய் தோ (2022), டாக்டர் ஜி (2022) மற்றும் பல படங்களில் தனது நடிப்பிற்காக பாராட்டப்பட்ட ஷீபா சத்தா.
1998-ம் ஆண்டு ஷாருக்கானின் ”தில் சே” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தனது திரைப்பட பயணத்தைத் தொடங்கியவர் ஷீபா சத்தா. இந்த படத்தில் அவரது பங்கு மிகக் குறைவாக இருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஷீபா ஷாருக்கானுடன் ”ராயீஸ் (2017) மற்றும் ஜீரோ (2018) ஆகிய படங்களில் திரையைப் பகிர்ந்து கொண்டார், இரண்டு படங்களிலும் அவரது தாயாக நடித்தார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை ஷீபா சத்தா, ஷாருக்கானுடன் பணிபுரிந்தது பற்றி பேசினார். அதன்படி, “ஜீரோ மற்றும் ராயீஸில் தான் ஷாருக்கானின் அம்மாவாக நடித்ததை நினைவுகூர்ந்த அவர், கல்லூரியில் ஷாருக்கான் தன்னுடைய சீனியர் என்றும் கூறினார்.