2 நாட்களில் ரூ.56 கோடி வசூலித்த “மிராய்” படம்

2 நாட்களில் ரூ.56 கோடி வசூலித்த “மிராய்” படம்


நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் கவனம் பெற்றது. இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும்.

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான “வைப் இருக்கு பேபி” பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. டிரெய்லரில் இடம் பெற்ற ஆக்சன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக நன்றாக உருவாக்கியுள்ளனர்.படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியது. இப்படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியானது.

இந்நிலையில் ‘மிராய்’ படம் 2 நாட்களில் ரூ..56 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *