2 நாட்களில் இத்தனை கோடியா?.. 'தக் லைப்' படத்தின் வசூல் விவரம்

சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான ‘தக் லைப்’ திரைப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் செய்திருக்கிறது. அதாவது, முதல் நாளில் மட்டும் ரூ.19 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாட்களில் தக் லைப் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.