2 கோடி பார்வைகளை கடந்த நானியின் "ஹிட் 3" டீசர்

சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.�
இப்படத்தை தொடர்ந்து நானி, ‘ஹிட் 3’ படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியானது.�
இந்நிலையில், நானியின் “ஹிட் 3” டீசர் 2 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.�