16 வயதிலேயே முன்னணி கதாநாயகி…ஒரே ஆண்டில் 12 படங்கள்…19 வயதில் சோகம்- யார் அவர் தெரியுமா?|Leading heroine at the age of 16…12 films in a single year…Sad at the age of 19- Do you know who she is?

16 வயதிலேயே முன்னணி கதாநாயகி…ஒரே ஆண்டில் 12 படங்கள்…19 வயதில் சோகம்- யார் அவர் தெரியுமா?|Leading heroine at the age of 16…12 films in a single year…Sad at the age of 19- Do you know who she is?


சென்னை,

திரையுலக ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்த பல கதாநாயகிகள் இருக்கிறார்கள். 16 வயதில் திரையுலகில் தலைகாட்டிய ஒரு நடிகை…துரதிர்ஷ்டவசமாக 19 வயதில் காலமானார். அந்த நேரத்தில், அவரது மரணம் திரையுலகத்தையே உலுக்கியது. அவர் யார் தெரியுமா..? அவர்தான் நடிகை திவ்ய பாரதி.

கிட்டத்தட்ட 21 படங்களில் நடித்த அவர் அந்த நேரத்தில், அதிக சம்பளம் வாங்கும் நடிகை. ஆனால் திவ்ய பாரதி 19 வயதில் இறந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திவ்ய பாரதி 1990-ம் ஆண்டு தனது 16 வயதில் ‘நிலா பெண்ணே’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வெங்கடேஷுக்கு ஜோடியாக ‘பாபிலி ராஜா’ என்ற திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அந்த நேரத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவரை பிரபலமாக்கியது.

அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் தேடி வந்தன. பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த திவ்ய பாரதி, ஷாருக்கானுடன் இணைந்து ‘தீவானா’ படத்தில் நடித்தார்.

பின்னர், அவர் தனது 19 வயதில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்து இறந்தார். 1992 முதல் 1993 வரை அவர் ஒரே ஆண்டில் 12 படங்களில் நடித்தார். திவ்யாவின் கடைசி படம் ‘ஷத்ரஞ்ச்’ ஆகும், இது டிசம்பர் 1993-ல் மரணத்திற்குப் பின் வெளியானது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *