131-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்

பெங்களூரு,
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். குறிப்பாக, கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து தன் 131-வது படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். பெங்களூருவில் துவங்கிய இப்படப்பிடிப்பில் அவருக்கு ரசிகர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்
வரும் 5-ம் தேதி ராம்சரணின் 16 வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.