100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் கூலி?|Rajinikanth’s Coolie to reach audiences in a 100 countries?

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் கூலி?|Rajinikanth’s Coolie to reach audiences in a 100 countries?


சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி பொழுதுபோக்குப் படமான ‘கூலி’ இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 -ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட், ‘கூலி’ படத்தை, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதாகவும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட இலக்கு கொண்டுள்ளதாகவும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு, இந்நிறுவனம் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது, ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த கூலி படம் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். இதில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, சபின் ஷாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் பரத்’ என்ற சூப்பர்ஹிட் தமிழ்ப் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

ரஜினிகாந்தின் 171வது படமான ‘கூலி’ தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டது. ‘கூலி’ ஒரு தனித்த படமாக இருக்கும் என்றும், அவரது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருக்காது என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *