10வது கூட தேர்ச்சி இல்லை, சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரம்…ரூ.25 கோடி சம்பளம் வாங்கும் நடிகை

சென்னை,
பலர் இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதில் சிலர் அதிகம் படிக்காவிட்டாலும், பிரபலங்களாக மாறி உள்ளனர். இந்த நடிகையும் அவர்களில் ஒருவர்தான். இவர் 10 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை, ஆனால் இப்போது ஒரு படத்திற்கு ரூ.15-25 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரது சொத்து ரூ.200 கோடிக்கு மேல்…அவர் யார் தெரியுமா? .
இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு நட்சத்திர ஹீரோவை மணந்து தற்போது குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
அவர் வேறு யாருமல்ல கத்ரீனா கைப்தான். இவர் பாலிவுட்டில் வெற்றிகரமான கதாநாயகியாக உள்ளார். பாலிவுட்டில் உள்ள அனைத்து நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கத்ரீனா நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவர் தாயாக போகிறார்.