1 கோடி பார்வைகளை கடந்த 'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர்

1 கோடி பார்வைகளை கடந்த 'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர்


சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், பின்னர் அன்று வெளியாகாது என்று படக்குழு அறிவித்தது. அஜித் நடித்த மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் கடந்த 16-ம் தேதி வெளியானது. இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், தற்போது ‘விடாமுயற்சி’படத்தின் டிரெய்லர் 10 மில்லியன் (1கோடி) பார்வைகளை கடந்து, தற்போது யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *