”ஹைலேண்டர்” பட ரீமேக்கில் இணைந்த இளம் நடிகை|Henry Cavill’s Highlander adds Marisa Abela to its cast

சென்னை,
ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ”ஹைலேண்டர்” பட ரீமேக்கின் முக்கியமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தில், மேன் ஆப் ஸ்டீல் பட நட்சத்திரங்கள் ஹென்றி கேவில், ரஸ்ஸல் குரோவ் ஆகியோர் நடிக்கும்நிலையில், தற்போது இளம் நடிகை மரிசா அபேலா இணைந்துள்ளார்.
இப்படத்தில், ஹென்றி கேவில், கானர் மேக்லியோடாகவும், ரஸ்ஸல் குரோவ்,ஜுவான் சான்செஸ்-வில்லாலோபோஸ் ராமிரெஸாகவும் நடிக்கின்றனர். அபேலாவின் கதாபாத்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை, என்றாலும், அவர் பிரெண்டா அல்லது ஹீதர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரீமேக்கை ஜான் விக் படங்களை இயக்கிய சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்குகிறார். படத்தின் ஸ்கிரிப்டை மைக்கேல் பின்ச் எழுதியுள்ளார். ஸ்காட் ஸ்டூபர், நீல் எச் மோரிட்ஸ், ஜோஷ் டேவிஸ், லூயிஸ் ரோஸ்னர் மற்றும் ஸ்டாஹெல்ஸ்கி ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.