''ஹீரோயினாகாமல் இருந்திருந்தால், அதுவாகத்தான் ஆகியிருப்பேன் – ''லிட்டில் ஹார்ட்ஸ்'' பட நடிகை

சென்னை,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ”லிட்டில் ஹார்ட்ஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஷிவானி நகரம். இவர் ஒரு நடிகை மட்டுமல்ல, குச்சிபுடி நடனக் கலைஞரும் கூட.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஹீரோயினாகாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்பது பற்றி கூறினார். அவர் கூறுகையில்,
”நீங்கள் ஹீரோயின் ஆகாமல் இருந்திருந்தால் என்னவாக ஆகியிருப்பீங்க?’னு நிறைய பேர் கேட்கிறார்க்ள். நான் ஹீரோயினாகாமல் இருந்திருந்தால் கண்டிப்பா ஒரு பாடகியாக ஆகியிருப்பேன். இசையும் நடனமும்தான் என் வாழ்க்கை” என்றார்.
1998-ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த இந்த நடிகை, கடந்த ஆண்டு ”அம்பாஜிபேட்டை மேரேஜ் பேண்ட்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ”லிட்டில் ஹார்ட்ஸ்” படத்தில் காதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை வென்றிருக்கிறார். அடுத்து சுஹாஸ் நடிக்கும் ”ஹே பகவான்” படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.