'ஹிருதயபூர்வம்' படத்தின் டீசர் அப்டேட்

'ஹிருதயபூர்வம்' படத்தின் டீசர் அப்டேட்


சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில் கண்ணப்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மோகன்லால் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வந்த ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் நடித்துள்ளார் . இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2015ல் சத்யன் அந்திக்காடு-மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘என்னும் எப்பொழுதும்’ படத்தை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் வெளியாவதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. சமீபத்தில் ‘ஹிருதயபூர்வம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ‘ஹிருதயபூர்வம்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பினை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ஹிருதயபூர்வம்’ படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *