'ஹிட் 3': 'முதல் 2 பாகங்களை பார்க்க வேண்டாம்' – நானி

சென்னை,
நானியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் திரில்லர் படமான ஹிட் 3 வருகிற 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், சாண்டல்வுட் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
சைலேஷ் கோலானு இயக்கி இருக்கும் இப்படத்தின் புரமோசன் பணி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நானி, ஹிட் 1 மற்றும் ஹிட் 2 படங்களை பார்க்கவில்லை என்றாலூம் கூட ஹிட் 3 -யை பார்க்கலாம் என்று நானி தெளிவுபடுத்தினார்.
மேலும், முதல் 2 பாகங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் இது தனி படம் எனவும் நானி கூறினார். இதன் மூலம் படம் அதிக பார்வையாளர்களை சென்றடைய முடியும் எனவும் தெரிவித்தார்.