'ஹிட் 3'- கவனத்தை ஈர்த்த ஸ்ரீநிதி ஷெட்டி…வைரலாகும் வீடியோ

சென்னை,
நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் நாளை பல மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஸ்ரீநிதி சில திரைக்குப் பின்னால் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக அதில் வரும் ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில், ஸ்ரீநிதி இயக்குனரின் நாற்காலியில் அமர்ந்து, நானி இடம்பெறும் ஒரு காட்சிக்கு “ஆக்சன்” மற்றும் “கட்” சொல்வதை காண முடிகிறது.
இது திரைப்பட இயக்கத்தின் மீதான அவரது ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. முன்னதாக புரமோசனின்போது ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக நானி தெரிவித்திருந்தார்.