‘ஹிட் 3’ கதை திருட்டு: நானி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,
பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த மே1-ந் தேதி வெளியான படம் ‘ஹிட் 3’. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலக அளவில் ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் விமலா வேலன் என்பவர் ‘ஹிட் 3’ படத்தின் கதை தன்னுடையது என்றுடம் தனது கதையை திருடி ‘ஹிட் 3’ படத்தை எடுத்துள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2021-ல் தான் எழுதிய ‘ஏஜெண்ட் வி’ என்ற கதையை திருடி தான் ‘ஹிட் 3’ படத்தை எடுத்துள்ளதாகவும், இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. விசாரணையில் நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் இந்த வழக்கு குறித்து உரிய பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.