ஹாலிவுட் ஸ்டைலில் "யாதும் அறியான்" டீசர்

சென்னை,
சமீப காலமாக தமிழ் சினிமாவில் நல்ல கதைகளும் வித்தியாசமான கன்டென்ட் உள்ள படங்களும் ஜெயிக்கின்றது. அதே போல் திரைக்கதையை வித்தியாசமாக சொல்லும் இயக்குனர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர்.
அந்த வகையில் இளம் இயக்குனரான கோபியும் தனது படைப்பின் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவர்வார் என தெரிகிறது. ஏற்கனவே செந்தூரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கோபி, தற்போது ‘யாதும் அறியான்’ என்ற சைக்கோ திரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் டீசர் இணையத்தில் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவிற்கு ஹாலிவுட் ஸ்டைலில் வித்தியாசமாக கொடுத்திருந்தார்.
இந்த படத்தில் லீட் ரோலில் அறிமுக நாயகன் தினேஷ் நடிக்க அவருடன் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.