"ஹார்ட் பீட் 2" தொடரில் சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்

சென்னை,
தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற தொடர் ஹார்ட் பீட்’. பல எமோஷலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் ‘ஹார்ட் பீட்’ வெப் தொடருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகம் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், 2-வது பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இதில் கிரண், கமல், ரோஷினி மற்றும் டி.எம். கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஹார்ட் பீட்’ சீசன் 2-வை தீபக் சுந்த சுந்தரராஜன் எழுதி இயக்கி உள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டெலி பேக்டரி தயாரித்துள்ள இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் கடந்த 22-ம் தேதி வெளியானது. இந்தத் தொடரில் நடிகைகள் தீபா பாலு, அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டாக்டர் ரதி தியாகராஜன் எனும் கதாபாத்திரத்தில் அனுமோல் அசத்தியுள்ளார்.தீபக் சுந்தரராஜன் இயக்கிய இந்தத் தொடர் 100-க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்டுள்ளன..இரண்டாம் பாகத்தில் அனுமோல் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அனுமோலிடம், “அழகான குரல் இருக்கிறது. பின், ஏன் தமிழில் டப்பிங் செய்யவில்லை” என இன்ஸ்டாவில் கேள்வி கேட்டிருந்தார். .அன்புக்கு நன்றிஇதற்கு பதிலளித்த நடிகை அனுமோல், “ரதி கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே முதல் சீசனில் அளித்த டப்பிங் குரலே சிறப்பாகவும் பிரபலமாகவும் இருந்ததால் அதுவே பயன்படுத்தப்பட்டது. மேலும், நான் கேரளாவில் இருப்பதால் சென்னை வர முடியவில்லை. வேறு சில படங்களில் நடிப்பதாலும் என்னால் டப்பிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்னும் தமிழில் நன்றாக பேச பயிற்சி வேண்டியுருக்கிறது. உங்களின் அன்புக்கு நன்றி” எனக் கூறினார்